முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Episode-1 எதிர்பாரா சந்திப்பு 🌹


ஹலோ மக்களே!


காலை வேளையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது சென்னையில் உள்ள பிரதான விமான நிலையம்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வந்து இறங்கியதும் அதில் இருந்து ஸ்ருதி அவசர அவசரமாக வெளியே வந்தவள் விமான நிலையத்தை விட்டு செல்வதற்காக வேகமாக சென்றாள்.

அவள் தன்னை யாரேனும் தொடர்ந்து வருகிறார்களா? என்று பார்த்துக் கொண்டே விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல...

அவள் வேகமாக வந்ததில் தனக்கு எதிரே வந்த ஆள் மீது மோதி விட்டிருந்தாள்.

தனக்கு எதிரே வந்த நபரின் மீது மோதிய வேகத்தில் பொத்தென தரையில் விழுந்த ஸ்ருதி "ஷ்.... அம்மா... " என்று வலியில் கத்திய படி தன் இடுப்பை பிடித்துக் கொண்டே எழுந்தவள்.

அப்போது தான் தன் எதிரில் முகத்திற்கு மாஸ்க்கும் கருப்பு கண்ணாடியும் அணிந்தபடி வாட்ட சாட்டாமான ஒரு ஆண் நின்று இருப்பதை கவனித்தாள்.

அவனை ஒருநிமிடம் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு நின்று இருந்தவள் பின் தலையை குலுக்கிக் கொண்டு..."ஹலோ சார் கூலிங் கிளாஸ் போட்டு இருந்தா கண்ணு தெரியாதா என்ன? இவ்வளவு பெருசா வளர்ந்திருந்தா மட்டும் போதாது... எதிர்ல யாரு வராங்கன்னு கூட தெரியாம இப்படித்தான் வந்து மேல மோதுவீங்களா?" என்றாள் கோபமாக.

 அப்போது இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்துவிட்டு வேகமாக அவள் எதிரில் நின்று இருந்த ஆணுடைய பாடிகார்ட்ஸ் இருவர் அந்த ஆணிடம் வந்து "சார் எனி ப்ராப்ளம்?" என்று கேட்டனர்.

 "நத்திங்...கிளியர் த வே... "என்றான் அவன் கம்பீரமான குரலில் .

 உடனே அந்த பாடிகார்டுகள் ஸ்ருதியை பார்த்து "மேடம் கொஞ்சம் வழி விடுங்க.. சார் போகணும்" என்று சொல்ல...

 "ஏன்? உங்க சார் நான் வர வழியிலேயே தான் போவாறா ? சுத்தி இவ்வளவு இடம் இருக்கே அந்த பக்கம் எல்லாம் போக மாட்டாரா?" என்று கேட்டாள்.

 "மேடம் தேவையில்லாம பேசாதீங்க... முதல்ல வழி விடுங்க" என்று சொல்லி ஒரு பாடி கார்டு ஸ்ருதியை நின்ற இடத்தில் இருந்து விலக்கப் போக...

உடனே அந்த ஆண் தன் கார்ட்சிடம் சற்று கோபமான குரலில் "லீவ் இட்.." என்றவன். தன் கையில் இருந்த கைத்தடியின் உதவியுடன் தட்டு தடுமாறி சுருதி இருந்த இடத்தை தாண்டி செல்லப் போனான்.

 அதை பார்த்தவளுக்கு அப்போதுதான் புரிந்தது உண்மையாகவே கண் தெரியாமல் தான் அந்த ஆண் தன் மீது மோதிவிட்டான் என்று.

 உடனே வேகமாக அந்த ஆணின் முன்னால் ஓடி நின்றவள் "சார் ஒரு நிமிஷம் நில்லுங்க... “ என்றவள்.

“ என்ன மன்னிச்சிடுங்க...நிஜமாவே உங்களுக்கு கண்ணு தெரியாதுன்னு எனக்கு தெரியாது. தப்பா எதுவும் பேசி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க. நான் இங்கே ஒரு முக்கியமான வேலையா வந்திருந்தேன். எங்கே அதை மிஸ் பண்ணிடுவோம்னு பதட்டமா ஓடி வந்து உங்க மேல தெரியாம மோதிட்டேன். தப்பு என் மேல தான் என்னை மன்னிச்சிடுங்க " என்று உண்மையாகவே அந்த ஆணிடம் மன்னிப்புக் கேட்டாள்.

உடனே அந்த ஆண் "பரவாயில்லை" என்று சொல்லிவிட்டு அவளை தாண்டி செல்ல போக....

 மீண்டும் அவன் முன்பு ஓடி நின்ற ஸ்ருதி "சார் ஒரு நிமிஷம் எனக்காக ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று கேட்டாள்.

 "சொல்லுங்க" என்றான் அந்த ஆண்.

 உடனே தான் செல்ல வேண்டிய இடத்தின் விலாசத்தை சொல்லி 
" அங்கே என்னை இறக்கி விட முடியுமா? நான் இந்தியாவுக்கு இப்பதான் முதல்முறையா வரேன். எனக்கு இங்கே யாரை நம்பி என்ன கேட்கிறது என்று தெரியல " என்றாள் தயங்கியபடியே.

அந்த ஆண் சிறிது நேரம் யோசித்து விட்டு "சரி "என்று தலையாட்டியவன்
தன் பி‌ஏ இஷாவிடம் கூறிவிட்டு தன் கார்டஸ்களுக்கு கட்டளையிட்டுவிட்டு அவன் முன்னே செல்ல....

அவன் பின்னே அவனுடைய பாடி கார்ட்ஸ்கள் அவனுக்கு பாதுகாப்பாக அவனை சூழ்ந்து கொண்டு செல்ல...
அவர்கள் பின்னால் ஓட்டமும் நடையுமாக ஸ்ருதி சென்றாள்.

டிரைவர் சீட்டின் அருகில் இருந்த சீட்டில் ஸ்ருதி ஏறிக்கொள்ள... கைத்தடியின் உதவியுடன் தட்டு தடுமாறி காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தான் அந்த ஆண்.

 அவன் ஏறி அமர்ந்ததும் கார் புறப்பட்டு சென்றது.

இஷாவும் மற்றவர்களும் வேறு காரில் அவர்களை பின் தொடர்ந்தனர்.

 டிரைவரிடம் தான் செல்ல வேண்டிய விலாசத்தைச் சொல்லிவிட்டு கார் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த ஆணை திரும்பிப் பார்த்து "ஹலோ சார் ஐ அம் ஸ்ருதி" என்று தன் கையை நீட்ட...

 அவள் தன்னை அறிமுகப்படுத்தியதற்கு பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவன் எதுவும் பதில் பேசாமல் இருப்பதை பார்த்தவள் "என்ன இவன் ஒரு மரியாதைக்கு கூட கைகுலுக்க மாட்டேங்கிறான்" என்று யோசித்தாள்.


 பின்பு "இவனுக்கு தான் கண்ணு தெரியாதே... நான் கைய நீட்டி ஹலோ சொன்னா இவனுக்கு எப்படி தெரியும் " என்று நினைத்தவள் பின்பு 


 "உங்க பேர் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? சார்" என்று கேட்டாள்.

" லோகேஷ்" என்றான் அந்த அவன்.

 "என்ன சார் பார்க்கிறதுக்கு இவ்வளவு மார்டனா இருக்கீங்க....ஆனா பேரு ரொம்ப பழசா இல்ல இருக்கே " என்றாள் ஸ்ருதி.

 அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க...

சரியான சிடு மூஞ்சி போல...என்று நினைத்துக் கொண்டவள் "நான் உங்களை லோக்கினு கூப்பிடட்டுமா? " என்று கேட்டாள்.

 லோகேஷ்" ம்ம்ம் "என்று வெறுமனே தலையாட்ட...

 "ஓகே லோகி, உங்களுக்கு எப்போ இருந்து கண்ணு தெரியாம போயிருச்சு…” என்றாள். 

அவள் இப்படி கேள்வி கேட்கவும் அவள் குரல் வந்த திசை நோக்கி திரும்ப…

“ நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? உங்களையும் உங்க கூட வர கார்ட்சையும் பார்த்தா ஏதோ பெரிய பிசினஸ் பண்றவர் போல தான் தெரியுது.

ஆனா அதே சமயம் உங்களையும், உங்க கூட வர்ற பாடிகார்ட்ஸையும் பார்த்தால் ஏதோ கொள்ளைக்கூட்டத் தலைவன் போலவும் தெரியுது" என்றாள் சிரித்துக் கொண்டே.


தன்னை பார்ப்பதற்கு கொள்ளை கூட்டத் தலைவன் போல இருக்கிறது என்று ஸ்ருதி சொல்லவும், இவ்வளவு நேரம் இறுகி இருந்த லோகேஷின் முகம் சிரித்த முகமாக மாற…


அதை பார்த்த ஸ்ருதி "லோகி நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க..." என்றாள்.

அதைக் கேட்டு லோகேஷ் மேலும் சிரிக்க... லோகேஷின் கன்னம் இரண்டிலும் குழி ஆழமாக விழுந்தது.

அதை பார்த்த ஸ்ருதி "வாவ் லோகி!! உங்க கன்னம் ரெண்டிலும் குழி விழுறது இன்னும் அழகா இருக்கு " என்றாள் வியப்பாக.

அவள் சொல்வது கேட்டு லோகேஷின் காது மடல்கள் இரண்டும் சூடாவதை உணர்ந்தவன். 

"என்ன இவ என்னை சின்னதா பாராட்டினாலே எனக்கு முகமெல்லாம் சூடாகுற மாதிரி இருக்கே…" என்று யோசித்தான்.

காரில் ஏறியதில் இருந்து ஸ்ருதி மட்டுமே பேசிக்கொண்டு வந்தாள். அவள் பேசுவதை எல்லாம் பொறுமையாக தலை ஆட்டிக் கொண்டே கேட்டுக்கொண்டு வந்தான் லோகேஷ்.

சிறிது நேரத்தில் அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் காரை விட்டு இறங்கிய ஸ்ருதி "ரொம்ப தேங்க்ஸ் லோகி... நான் 
இந்தியாவிற்கு தனியா கிளம்பி வந்த அப்போ இந்த ஊர் எப்படி? இங்கே இருக்கவங்க எல்லாம் எப்படிபட்டவங்கன்னு ரொம்ப பயந்துட்டே தான் வந்தேன். ஆனா நான் இந்தியாவில் பார்த்த முதல் ஆள் நீங்க தான். நான் கேட்டதும் யோசிக்காம உதவி இருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ் " என்றாள் ஸ்ருதி.

அவள் பேசுவதை கேட்டுவிட்டு" ம்ம்ம்" என்று மட்டும் தலையாட்டிய லோகேஷ் சற்று இறுக்கமாக அமர்ந்திருக்க..

 அவனுடன் பேசிய கொஞ்ச நேரத்திலேயே அவன் இப்படித்தான் என்று தெரிந்து கொண்ட ஸ்ருதி அவனைப் பார்த்து லேசாக சிரித்து விட்டு "ஓகே லோகி எனக்கு டைம் ஆச்சு நான் போயிட்டு வரேன்" என்றவள்.

 "எனக்கு ஹெல்ப் பண்ண உங்களுக்கு எதுவும் திரும்ப செய்யணும்னு ஆசையா இருக்கு. ஆனா என்ன செய்றதுன்னு தெரியல மறுபடியும் நாம மீட் பண்ணினா.... அப்போ உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா தயங்காம என்கிட்ட கேளுங்க.... என்னால முடிஞ்ச வரைக்கும் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் " என்று அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் அவசர அவசரமாக அங்கிருந்த கட்டிடத்துக்குள் நுழைய...

தன் கார்ட்ஸ்களை அழைத்த லோகேஷ் அவர்களிடம் ஏதோ கூற சரி... என்று தலையாட்டி விட்டு ஸ்ருதி சென்ற அந்த கட்டிடத்துக்குள் அவனுடைய கார்ட்ஸ் நுழைந்தனர்.

*******

 இங்கு....

திரைப்படத்துறையில் பிரபல இயக்குனரான வருணின் புதிய திரைப்படத்திற்கு புதுமுக நடிகைக்கான தேர்வு நடந்து கொண்டு இருந்தது.

 அவனுடைய கதைக்கு ஏற்கனவே இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரை தன் தனித்திறமையை காட்டி கொண்டு இருக்கும் பிரபல ஹீரோ சித்து தான் வருணின் புதிய படத்தில் ஹீரோவாகிறான்.

 அவனுடன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஏற்கனவே அவனுடன் நடித்த பல முன்னணி கதாநாயகிகள் போட்டி போட்டு வந்தாலும்.
இந்த கதைக்கு ஒரு புதுமுகம் ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது வருணின் எதிர்பார்ப்பு.

 அதற்கு சித்துவம் சம்மதிக்க சித்துவுடைய ஆக்டிங் ஸ்கூலில் உள்ள ஸ்டுடியோவில் புதுமுக நாயகிக்கான தேர்வு நடைபெற்றது.

சித்துவின் ஸ்டுடியோவில் நடிப்பிற்காக பயிற்சி பெற்று வரும் பெண்கள் அனைவரும் இந்த புதுமுக நடிகைக்கான தேர்வில் கலந்து கொண்டனர்.

ஆனால் அவர்களில் ஒருவரை கூட வருண் தேர்ந்தெடுக்கவில்லை. அவன் கதைக்கு ஏற்ப இங்கு யாருமே இல்லை என அவர்களுக்கு தோன்ற... பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தனர்.

 கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக இந்த தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் வருணுக்கும் சித்துவுக்கும் எந்த ஒரு புதுமுகத்தையும் தங்கள் படத்திற்காக கதாநாயகியாக தேர்ந்தெடுக்க விருப்பமில்லை. 
யாருமே அவர்கள் கதைக்கு ஏற்ப வரவில்லை என்பது இருவரின் ஒன்றிய கருத்தாகவே இருந்தது.

 இன்று தான் ஆடிசனின் கடைசி நாள் எப்படியாவது தங்கள் படத்திற்கு ஹீரோயினை தேர்ந்தெடுக்க வேண்டும் என இருவரும் இன்று வரும் புது முக நடிகைகளுக்காக ஆவலாக இருவரும் காத்திருந்தனர்.

இன்று ஆடிசனுக்கு வந்திருந்த ஒவ்வொருவரையும் வருணும் சித்துவும் தங்கள் படத்திற்காக இதில் யாரேனும் தேர்ந்தெடுக்க வேண்டும் என முயற்சிக்க....ஆனால் அவர்களுக்கு எந்த முகமும் திருப்திப்படவில்லை.

 ஆடிசனுக்கு வந்த பெண்களில் தங்கள் கதைக்கு சற்று பொருந்திய ஒரு சில பெண்களை மட்டும் வெய்ட்டிங் லிஸ்டில் வைத்திருந்தனர்.

 "என்ன வருண் இது...இந்த ஊர்ல ஒரு அழகான பொண்ணு கூடவா இல்ல? நம்ம கதைக்கு ஏத்த மாதிரி ஒரு புதுமுகம் கூட கிடைக்க மாட்டேங்குது... கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல இந்த மூணு நாள்ல ஆடிஷன் பண்ணி இருப்போம் ஆனால் ஒருத்தர் கூட நம்ம கதைக்கு சூட் ஆகுற மாதிரி இல்ல... "என்று சித்து சொல்லிக் கொண்டிருக்கும்போதே...

இவர்கள் இருந்த ஹால் கதவை யாரோ தட்ட..." கம் இன்" என்று கதவை பார்த்து வருண் சொன்னான்.

 அப்போது அந்தக் கதவை திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே வர... அவளைப் பார்த்து வருணும் சித்துவும் இவள் தான் தங்கள் படத்தின் கதாநாயகி என்று முடிவு செய்துகொண்டனர்.


❤️

ஸ்டோரி பிடிச்சிருக்கா மக்களே உங்க கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்க மக்களே.

இது போல புதிய ஸ்டோரி updates தெரிஞ்சுக்க என்னோட வாட்ஸாப்ப் சேனல் link இல் join பண்ணி டெய்லி updates தெரிஞ்சுக்கலாம் மக்களே 🌹

https://whatsapp.com/channel/0029VaZJ2DhEgGfEWmDc0s3y  


நன்றி 

உங்கள் லயா ❤️

❤️

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Episode -13 என்கிட்டே வந்து வசமா மாட்டிக்கிட்ட...

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹 குரல் வந்த திசையை நோக்கி  திரும்பிப் பார்த்த ஆத்விக் அழகு சிலை ஒன்று பட்டுடுத்தி தன் கண் முன் வந்து கொண்டு இருந்தவளை பார்த்து ஸ்தம்பித்து போய் விட்டான்   ஆத்விக்கை விட அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தது ஷ்யாம் தான். ஏனென்றால் அவனுக்கு அன்வியை பற்றி நன்றாகவே தெரியும். அவள் பல பிசினஸ்கள் செய்து அதில் அனைத்திலுமே கொடி கட்டிப் பறக்கும் நம்பர் ஒன் பிசினஸ் உமென் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.  அன்வியைப் பார்த்த ஆர்வத்தில் ஆதவிக்கிடம் "டேய் ஆத்விக் உனக்கு ஜாக்பாட் தாண்டா அடிச்சிருக்கு " என்றான். "என்னடா சொல்ற எனக்கு ஒன்னும் புரியலையே" என்று கேட்டான் ஆத்விக் .   "டேய் நீ கல்யாணம் பண்ணிக்க போறது சாதாரணமான பெண் கிடையாது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் பிசினஸ் வுமன் இவங்க தான். இவங்க கால் பதிக்காத தொழிலே இல்லைன்னு தான் சொல்லணும் என்னம்மா அம்மாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோமே அதுகூட இவங்களோடது தான்" என்றவன்.  "மிஸ்ஸிங் அம்வியைப் பற்றி நீ கேள்விப்பட்டதே இல்லையா? அவங்கள இதுக்கு முன்னாடி நீ பார்த்ததே இல்லையா?" என்றான் ஆ...

Episode -12 உள்ள போனா என்னை என்ன பண்ணுவானோ

ஹலோ பிரெண்ட்ஸ முகில் ரோஜாவின் வீட்டிற்கே வந்து தன்னை ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் அயனை திருமணம் செய்து கொண்டாள் . அயன் ரோஜா கழுத்தில் கட்டாய தாலி கட்டி கூட்டி வந்துவிட்டானோ என்று அவளிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டான் . ரோஜாவின் இடையில் கைகொடுத்து அழுத்தம் கொடுத்த அயன் சொல்லு ரோஜா அதான் நியாயம் கேட்டு வந்து இருக்காரே மிஸ்டர் முகில் அவருக்கு பதில் சொல்லு...என்று அவளையே குறு குறுவென பார்த்துகொண்டு  இடையை அழுத்தினான் . இதை அவர்கள் எதிரே  சோபாவில் அமர்ந்து இருந்த முகில் கவனித்தான் . ஆனால் ரசிகாவிற்கோ ,செண்பகத்திற்கோ அயன் செய்யும் லீலை தெரியவில்லை . அப்போது தான் தோட்டத்தில் இருந்து வந்த தேவகியும் உள்ளே வந்தவர் இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து ரோஜா என்ன சொல்ல போகிறாள். இந்த முகிலை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் அப்போதைக்கு அயனை திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொன்னாளா இல்லை உண்மையாகவே ரோஜாவிற்கு பிடித்து தான் தன் மகனை திருமணம் செய்துகொண்டாளா என்று அவரும் ரோஜா சொல்ல போகும் பதிலுக்கு காத்திருந்தனர் . அனைவரும் ரோஜாவையே பார்க்க அவளுக்கு அது ஒரு மாதிரியாக போய்வி...

நியூ ஸ்டோரி அப்டேட்

முகம் தெரியாதவனுடன் ஓர் இரவு   🔥 மிகவும் சாதாரணமாக அதன் போக்கில் வாழ்ந்து கொண்டு இருந்த என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி போட்டது அந்த ஓர் இரவு . "இது எல்லாம் நான் நேற்று பார்ட்டிக்கு போனதால் வந்த வினை . என் தோழி ஒருத்தி அவள் காதல் கை கூடிவிட்டதுன்னு சொல்லி எனக்கு ட்ரீட் கொடுக்க என்னையும் சில தோழிகளையும் அழைத்துக்கொண்டு அந்த பப்பிற்கு சென்றால்.அங்கே அன்றைய ட்ரீட் முழுவதும் அவளுடைய செலவு . அப்போ சொல்ல வேணுமா என்ன ? கணக்கில்லாமல் ட்ரிங்கஸ் குடித்தோம் அனைவருமே. நான் பீர் அதிகம் குடித்ததனால் வயிறு முட்டிக்கொண்டு வந்துவிட்டது. தோழியிடம் சொல்லிவிட்டு பாத்ரூம் சென்று வெளியே வந்தேன்".         நடக்க முடியாமல் நான் தடுமாறி கீழே விழும்வேளையில் ஒருவன் வந்து என்னை இடையில் காய் கொடுத்து பிடித்துக்கொண்டான். அவனிடம் இருந்து விலகி நான் அவனை யார் என்று பார்த்தேன் . போதையில் அவன் மகம் எனக்கு சரியாக நினைவில் இல்லை . ஆனால் அவன் உடல் அமைப்பை வைத்து அவன் மிகவும் அழகாகி தான் இருந்திருக்க வேண்டும் . அதுவரை தான் எனக்கு நினைவில் இருக்கிறது .     "ம்ஹு..." ப...